கொஞ்ச நாட்களும் சில வரிகளும்

* இன்னொரு முறை ஹைதராபாத் போவது என்பது எதிர்பாராமல் சாத்தியப்பட்ட ஒன்று. PyCon இந்தியா பதிவு தொடங்கியதும் மநுவிடம் விடுமுறை கிடைக்குமா போவதற்கு என்றேன். அவர் அதற்கென்ன கொஞ்சம் பைசாவும் வாங்கிக் கொள் என்றார். உடனே அலுவலகத்தில் வேறு எவருக்கேனும் விருப்பமிருந்தாலும் போய் வரலாம் என அறிவித்தார். அன்றே பதினோரு பேருக்கு மேல் தயாராக இருந்தார்கள். கொஞ்சம் பைசா என்பதை மநு எவருக்கும் எவ்வளவு என்று சொல்லவில்லை. எனக்கு பொது நுழைவுச் சீட்டு வாங்கியதும், என்ஃபா என்கிற … Continue reading கொஞ்ச நாட்களும் சில வரிகளும்

‘அன்று வயநாட்டில்’ அல்லது ‘377’

இனியும் எழுதாமலிருக்க என்னால் ஆகாது. இன்னும் ஒரு தினம் கழியும்போது சந்தித்து ஒருவாரம் ஆகிவிடும். ஆனாலும் நேற்று போலிருக்கிறது. நானோ இன்று போலிருக்கவே வேண்டுகிறேன். இன்றும் மீண்டுமொரு சந்திப்பு நிகழவே விரும்புகிறேன். எனவே இந்த கட்டுரை சில புனைவுச்சங்களை அல்லது வீழ்ச்சிகளை அடையும்போது நீங்கள் என்னை மன்னித்தாக வேண்டும். இல்லாவிடில் சிலவற்றை ஜீரணிக்க உங்களுக்கோ அல்லது ஏன் எனக்கே பிற்பாடு கடினமாக இருக்கும். எப்படியோ பயணத்துக்கு முந்தைய வெள்ளிக் கிழமை எனக்கு ஒவ்வாமை காரணமான சளி பிடித்து … Continue reading ‘அன்று வயநாட்டில்’ அல்லது ‘377’

அண்டைப் பெருமழை

குங்குமம் (ஆகஸ்ட் 24) இதழுக்காக கட்டுரை கேட்டிருந்தார்கள். கேரள வெள்ளம் குறித்து. கவிஞர் சுகுமாரனிடம் எழுத முடியும் என்று தோன்றவில்லை என்றேன். ஆனால் தொடர்ந்து முகாம்களுக்கு சென்று வந்ததும், நேரில் பாதிப்புகளை பார்த்து உண்டான கொந்தளிப்பில் இரவொன்றில் இதை எழுதத் தொடங்கினேன். நானே எழுதாமல் விட்டால் என்ன பொருள் இருக்க முடியும். திருத்தப்படாத முழுக் கட்டுரையையும் கீழே தந்திருக்கிறேன். * இந்த வருடம் நல்ல மழை என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஓணக்காலம் வரை பெய்கிற இடவப்பாதி மழை. இம்மாத தொடக்கத்தில் … Continue reading அண்டைப் பெருமழை

சிறுகதைகள்

குக்கூ காட்டுப்பள்ளி தெரியும். குழந்தைகள் தங்களுக்கு இன்றியமையாதவற்றை அங்கே செலவிடுகிற நேரங்களில் கண்டடைவது முகம் காட்டும் புகைப்படங்களால் மயங்கியிருந்தேன். எனில் எனக்கு கண்டடைவதற்கு நான் பெரும்பகுதி இழந்த குழந்தைமையே கிடைக்கலாம் என்று தோன்றும். கிடைக்குமா என்றும். ஆனால் செல்வதற்கான தருணம் அமையவில்லை. ஜே.சி.குமாரப்பாவை அறிமுகம் செய்யும் தமிழ் நூலொன்றின் வெளியீட்டுக்காக செல்வதற்கு திட்டமிட்டிருந்தேன். ஆனால் சேலம் சென்று இறங்கிய பின்னரே தெரிந்தது வெளியீட்டை தள்ளி வைத்தது. அதன் பிறகு இப்போது. யாவரும் பதிப்பகத்தின் சிறுகதைகள் தொடர்பான இருநாள் … Continue reading சிறுகதைகள்

இப்படியாக ஹைதராபாத் – 04

இமைகள் தூக்கத்தில் குப்குப் என்று ஒட்டிக் கொள்ள உடல் விழுந்தது. ஆறு மணி ஆகியிருந்தது. எழ முயற்சித்தால் தலை வலித்தது. இன்னும் முப்பது நிமிடம் அலாரம் மாற்றி வைத்தேன். அப்படி எழுந்து தயாராகி முக்கியச் சாலையில் இருந்த ஏடிஎம் சென்று பணம் எடுத்ததும் வண்டி பதிவு செய்தேன். சிகந்திராபாத் சென்று இறங்கவும் மணி எட்டு. எட்டரைக்கு கோனார்க் அதிவிரைவு ரயில். அய்யோ அப்படியே புவனேஷ்வர் போகலாமே என்று தோன்றியது. ஒடிஷா. வெகு விரைவில் அதற்கு வாய்ப்பு அமையலாம். இல்லையென்றால் … Continue reading இப்படியாக ஹைதராபாத் – 04

இப்படியாக ஹைதராபாத் – 03

ஒரு மிகப்பெரிய விமர்சனம் பாரதி மற்றும் நிறைபேர் சொல்லக் கேட்டது ஹைதராபாத் போக்குவரத்து ஒருங்கிணைப்பு இல்லாத நகரம். பேருந்துகள் குறைவு. இருக்கலாம். ஆனால் தனியான நான் பயணம் செய்யும் போது பெரிய சிரமம் இல்லாதது போலவே உணர்ந்தேன். மேலும் சரியான வழி தெரிந்தால் இன்னும் எளிதாக இருக்கும். போதாததற்கு ஷேர் ஆட்டோக்கள் நிறைய பகுதிகளில் கிடைக்கும். இல்லாவிட்டால் கடைசியாக ஊபர், ஓலா போன்றவை. என்னை கேட்டால் சிரமம் மொழி மட்டுமே என்று சொல்வேன். எனக்கு ஹிந்தி, தெலுங்கு … Continue reading இப்படியாக ஹைதராபாத் – 03

இப்படியாக ஹைதராபாத் – 02

ஒரு பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று குழப்பம் இருக்கிறது. Bouguereau. அவர் வரைந்த ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். கணினியில் எல்லாம். இப்போது பிப்லிஸ் என்கிற ஓவியம் நேரிலும் பார்த்துவிட்டேன். சாலார் ஜங் அருங்காட்சியகம். உலகின் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. மேலும் தனிநபர் சேகரிப்பு என்கிற வகையில் முதலாவது இதுவே. சாலார் ஜங், மிர் யூசுப் அலி கானின் சேகரிப்புகள். அதற்கு ஒரு நாள் போதாது. சில முக்கியமான பகுதிகள் மட்டும் பார்க்கலாம் என்பது பாரதியின் யோசனை. ஒரு … Continue reading இப்படியாக ஹைதராபாத் – 02

இப்படியாக ஹைதராபாத் – 01

அறையிலிருந்து கிளம்பியது நல்ல வெயிலில். ஆட்டோ கிடைக்கவில்லை. ஒரு பத்து நிமிடம் மேடான சாலையில் இரண்டு பைகளையும் தூக்கிக் கொண்டு ஒன்று விலாவில் இடித்தபடி இருக்க நடந்தேன். தொடர்ந்து ஆட்டோ, பேருந்து மாறி ஆலூவா ரயில் நிலையம் சரியான நேரத்தில் சென்று இறங்கினேன். எப்படியோ ரயில் தாமதம். ஹைதராபாத் போவதற்காக வெள்ளிக் கிழமை விடுமுறை எடுத்திருந்தேன். ஆனாலும் கொஞ்சம் அலுவலக வேலைகள் முடித்த பிறகே கிளம்பி வந்திருந்தேன். அன்றைக்கு காலையிலேயே எல்லா கர்நாடகப் பயணக் கட்டுரைகளை என் … Continue reading இப்படியாக ஹைதராபாத் – 01

கர்நாடகத்தில் நடப்பது – 07

எங்கள் அறை இருந்தது சோமநாதபுரத்துக்கு உள்ளே செல்லும் சாலைக்கு அருகில், பண்ணூரில். ஏழு மணிக்கு தயாராகி தொட்டுவிட முடியும் பனியில் குளிருக்கு இதமாக தேநீர் குடித்தோம். அப்போது தயாராக நின்றிருந்த ஷேர் ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். அந்த ஆட்டோ சோமநாதபுரம் தாண்டி எங்கேயோ போவது. கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர். ஒருவருக்கு பத்து ரூபாய். கேசவன் கோயில் ஒரு பெரிய வளாகம் என்று நான் எதிர்பாக்கவில்லை. ASI நுழைவுச் சீட்டு தருவது நாங்கள் போன கோயில்களில் இதுவே முதலாவது. … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 07

கர்நாடகத்தில் நடப்பது – 06

எழுந்ததும் மாதவனை எழுப்பினேன். குளிப்பதற்கு மேலே இருந்த பணியாளர்களுக்கான குளியலறைக்கு போனேன். குளிர் நீரில் குளித்துத் தாயாரானபோது, ஏழரை மணி. முதலில் எங்காவது ஏடிஎம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. முந்தைய நாள் இரவிலிருந்தே தேடிக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீரங்கப்பட்டினம் போன்ற இடத்தில், உண்மையில் இந்த பயணத்தில் எங்குமே ஏடிஎம்கள் அரிதாகவே கண்ணில் பட்டன. பெரும்பாலானோர் தேசிய வங்கிகளை பயன்படுத்துவதை விடவும் தங்களது மாநில வங்கிகளையும் உள்ளூர் கூட்டுறவு வங்கிகளையுமே பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏடிஎம்கள் குறைவு. என்னிடம் ஒருவர் பேடிஎம் போன்ற … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 06