அவியா காவலர்

இன்றைக்கு அவன் வராமல் இருப்பது நல்லது என்பது அவள் எண்ணம். இன்றைக்கு பாருங்கள் ஊரே விழித்திருக்கிறது. தினை விளைந்து நிறைத்துப் பரந்த மலை நாட்டின் நிலங்களில் இன்று அறுவடை. இரவும் பணியைத் தொடர்ந்து விடியும் முன் முடித்திருக்கப் பார்ப்பார்கள். ஏனெனில் அறுவடை முடிந்த நாள் தொடங்கி, சில தினங்கள் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கும் ஊர். அதற்காக கொளுத்தப்பட்ட பந்தங்களின் ஒளி நிறைத்து ஊரில் இருளை அண்டவிடாது. களத்தில் அறுப்போர் களைப்புக்கு தணிப்பாக இசைப்படும் தொண்டகச் சிறுபறையானது, யாமத்தில் கண்ணயர்ந்து உறங்கி விழும் காவலரையும் … Continue reading அவியா காவலர்

Advertisements

கல் விளக்குகளில் தூண்டப்பட்ட தீ

'சவுட்டி இறுக்கி ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்ட'வர்களின் வலிகளையும் கொண்டாட்டங்களையும், திண்டாட்டங்களையும் பதிவுசெய்யும் கவிதைகளாக மட்டுமில்லாது மனதுக்கு நெருக்கமாகி, பிரச்சாரமோ அல்லது மேம்போக்கு அரசியல்கூத்தாகவோ இல்லாத கவிதைகள் இந்த 'கல்விளக்குகள்' என்னும் என்.டி.ராஜ்குமாரின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பில் உள்ளவை. 'பிரம்மத்திற்குள் மறைந்திருந்தோ ஒரு சாரருக்கு மாத்திரம் தெரிந்த மொழிக்குள் ஒளிந்திருந்தோ கதைகள் பேசாமல் கோழைவாயோடு வெற்றிலைக் குதப்பிக் கொண்டே பறட்டைத்தலையோடு திரியும் தங்கச்சாமியின் உடலில் புகுந்து திங்கு திங்கென்று ஆடிக் கொண்டே எல்லோருக்கும் தெரிந்த மொழியில் குறிகள் … Continue reading கல் விளக்குகளில் தூண்டப்பட்ட தீ

கொஞ்சம் விலகியிருத்தல்

கொஞ்சநாள் தானே இருந்துவிட்டு போகட்டும் தனிமை பிறகு, இன்னும் கொஞ்சநாள் நாட்கள் கழியத்தான் செய்யும் தேடல் என்றெல்லாம் ஒன்றுமில்லை தேடல் இங்கு அபத்தமாகிறது காத்திருப்பு என்று சொல்கிறேன் ஒரு சந்திப்புக்கான காத்திருப்பு எல்லா சந்திப்பிலும் என் தனிமையை சீண்டுகிறது சந்திப்பை குலைக்கிறது கொஞ்சநாள் இருக்கத்தான் செய்யும் இருந்துவிட்டு போகட்டும் *** இங்கே பாரேன் என் வாழ்கை இப்படித்தான் இன்றைக்கு உன் முகத்தை பார்க்கத் தோன்றிய நொடி நினைவுக்கு வருகிறது தீயிலிட்டு நான் பொசுக்கிய உன்னுடைய கடிதம் பின்னர் … Continue reading கொஞ்சம் விலகியிருத்தல்

பெரியோரை வியத்தலும் இலமே

ஒரு பெரும் காதலனாகவே எனக்கு தாந்தேவை தெரியும்.  காதல் கொண்ட தன் நகரத்தில் வாழ்வதற்கு இயலாதவனாக, தன் பிரியத்துக்குரியவளை வாழ்வில் கொண்டிருக்க முடியாதவனாக வாழ்ந்து மடிந்த இத்தாலிய கவி. ஆனால், அவனின் வார்த்தைகளில் எண்ணூறு வருடங்களுக்கு பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் பியாட்ரிஸ். அவளே அவனுக்கு சொர்கத்தில் வழிகாட்டியாய் இருக்கிறாள். கிறிஸ்துவ இலக்கியத்தில் தாந்தேவின் படைப்பு உண்டாக்கிய உருவகங்களே இன்றைய சொர்க, நரகத்தித்தை கொடுத்தவை. அதே இத்தாலியை சேர்ந்த இன்னொருவர் தமிழின் தாந்தே எனப்படுகிறார். அவர் காதல் கொண்டிருந்தது … Continue reading பெரியோரை வியத்தலும் இலமே