நான் ஏன் எழுதுகிறேன்

எதையாவது எழுதியபடி இருக்கிறேன் அது ஏனோ அம்மையின் மடியில் கிடந்து குழறுவதன் தொடர்ச்சியாய் இருக்கும் பிரயத்தனம் கொண்டிருக்கிறது அப்படியே பேசவும் செய்கிறேன் வார்த்தைகள் அர்த்தம் சேர்க்கின்றன அவற்றை அடுக்கி அர்த்தம் தாண்டி ஆதி குழறலுக்கு செல்லும் போதெல்லாம் உங்களுக்கு சிரிப்பு வரலாம் அதில் பொருள்காண மேதைமையை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை அதை தாண்டும் பக்குவத்தையும் ஆனால், எனக்கு சொல்ல ஏதாவது இருந்தபடியே இருக்கும் கதைகளில் வாழுங்கள் உங்களுக்கு நூறு வாழ்வு ஆயிரம் பேர் நீங்கள் என் அத்தனை காதல்களில் … Continue reading நான் ஏன் எழுதுகிறேன்

Advertisements

கவிதைகள்; மொழி மற்றும் கடல்

மொழி அந்நியமொழி வார்த்தைகள் சேர்த்துச் சேர்த்து வாக்கியம் வாங்குவதாய் ஒவ்வொன்றாய் அர்த்தப்படுத்தி வாழ்வை இழைக்கிறேன் வல்லமையெல்லாம் பெறும்நொடி வேறொரு மொழிகிளைத்தோ புதியதொரு உரைபு முளைத்தோ என்னை மீண்டும் பிறப்பிக்கும் நான் குழந்தை. சொல்வனம், 29 திசம்பர் 2014 கடல் இல்லாத கிணற்றில் குதிப்பது எனக்கு பயத்தை தருகிறது சரி, தெரியாத குளம் எத்தனை பெரிய வறட்சியாகட்டும் நான் என்னை கட்டி பூஜிக்காமல் என்னவளை தெரிந்திருக்கிறேன் ஒரு விடுகதை போலிந்த ஏரியில் மிதந்து எதையோ அளக்கிறேன் ஆற்றிலே நான் … Continue reading கவிதைகள்; மொழி மற்றும் கடல்

பால்யகால சகி – மறுவாசிப்புக்கு முன்

உண்மையில் நான் சுகறாவை நேரில் சந்திக்கும் வரை எந்த கற்பனைகளும் எனக்கு இருந்திருக்கவில்லை. இதுவரை நான் சந்தித்திருந்த, என் வாழ்வில் அத்தனை நெருக்கத்தில் கொண்டிருந்த சுகறாக்களை பற்றிய நினைவுகளையும் அந்த சந்திப்பு தூண்டியது. ஆமாம், முன்கதையும், பின் கதைகளும் வெவ்வேறு விதமானவையாக இருந்தாலும் "கன்னங்கள் ஒட்டி, கைவிரல்களின் எலும்புகள் துருத்தி, நகங்கள் தேய்ந்து, வெளிறிப்போய்", இருக்கக்கூடிய பெண்கள் எல்லோரும் ஒருவிதத்தில் சுகறாதான்.

கவிதையை அந்நியமாக்கல்

கவிதையை செம்மையாக்கம் செய்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இணையத்தில் புழங்கும் சங்கக் கவிதைகள் அத்தனையும், செம்மையாக்கம் என்கிற பெயரில் அந்நியமாக்குவதாக எனக்கு தோன்றுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளை கடந்து வந்திருக்கும் கவிதைகளில் கைவைக்க, எளிமைப்படுத்த அல்லது நோக்கம் தரப்படுத்தல் என்பதாக தெரிகிறது, அதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? //எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப// என்கிற வரிகள் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், தற்செயலாக ஊ.வே.சா அவர்களின் பதிப்போடு … Continue reading கவிதையை அந்நியமாக்கல்

எண்கள் – அசோகமித்திரன்

முழுவதும் மனதில் உண்டாகிற எண்ணங்களே கதை. கதாபாத்திரம் நின்று காத்திருக்க நேர்கிற சந்தர்ப்பம் ஒன்றில் உண்டாகிற எண்ணங்கள். மனதுடைய மொழி, சிந்திக்கிற மொழியானது இயல்பான பேச்சு மொழி. அது ஒரு செய்தித்தாளுக்கான காத்திருப்பு. அந்த செய்தித்தாளுக்கான அவசியம் பற்றி, அதை சொந்தமாக தினம் வாங்குவதில் இருக்கிற சிரமம் மற்றும் சலிப்பு. காத்திருக்கிற இடம் பற்றிய பிரக்ஞை. அந்த இடத்தின் இயல்பு மற்றும் பயன்பாடு. வாசிக்க செய்தித்தாள் கிடைக்கிற பிற இடங்கள். கதை சொல்லியின் சில அன்றாடச் செயல்கள் பற்றிய விவரங்கள். அதை தொடர்ந்து … Continue reading எண்கள் – அசோகமித்திரன்

தெற்கின் இரு கவிதைகள்

கொஞ்சம் நாம் நனையவே இன்றைக்கு பெய்யும் மழை, இது தெற்கின் மழையென அறிவாயா? ஓடாதே, நில் நாம் நனைவோம் எல்லா மழைகளும் நனைவதற்கல்லா எல்லா மழைகளும் நினைவிலும் நிற்பதில்லை ஓர் அளவுக்கு எல்லா மழைகளும் குழந்தைகளுக்கே சந்தோஷமளிக்கின்றன நான் கொண்டாடிய முதல் மழை வெயிலோடுகூடியதும் காணவே இதுவரை எவருக்கும் வாய்த்திருக்காத காகங்களின் கல்யாணத்தோடு சேர்ந்ததும் என்று அறிவாயா? எனில், கடல்கடந்து ஏதேனும் தென்திசை தீவு ஒன்றிலாக இருக்கும் நீ கொண்டாடியது ஆலங்கட்டி மழையா? எவருக்கோ எங்கோ பணமழையும், … Continue reading தெற்கின் இரு கவிதைகள்

இந்த ஓலம்

இன்றைக்கு நான் சுமைதூக்கியாவது என் பால்யத்தின் ஒரு நாளை மீட்டெடுக்கிறது அதன் அச்சங்களை எளிமைப்படுத்தலாம் உங்களுக்கான உணவில் வெறொரு கையை பிச்சையாக இல்லாதபோது எப்படி ஏற்பீர்கள்? இதோ எதையோ பறிகொடுத்தவனின் ஓலம் எனக்குள் எந்த உணர்வையும் கிளர்த்தாதது உங்களுக்கு அதிசயமாக இருக்கலாம் இது என் சகாவினுடைய ஓலம் ஒரு நாள் என்னிலிருந்து வெளிப்பட்டதே நாளைக்கு மீண்டும் என்னுடையதாக இருக்கலாம் இந்த ஓலம் டிசம்பர் 2015 *** நட்சத்திரங்கள் இந்த நட்சத்திரங்களை என்ன செய்வது இவை மின்னுவது எதன்பொருட்டு? … Continue reading இந்த ஓலம்