இவை தூதுக்கவிதைகள் அல்ல

இவ்விரு கவிதைகளும் ஒரு நீண்ட தொடர்வண்டி பயணத்தில் எழுதப்பட்டவை. கர்நாடகா வரையிலான அந்த பயணம் நிறைய கதைகளை என்னுள் விதைத்திருக்கிறது. ஒரு பெரிய கனவையும் தடை நீக்கி துரிதப்படுத்தி இருக்கிறது. கனவுகளே நீண்ட பயணங்கள் போலிருக்கிற வாழ்கை ஒரு சமயத்தில் இணையற்ற மகிழ்சியையும், தொடர்ந்து உடனேயே பெரிய விரக்தி ஒன்றையும் தரக்கூடியது. அதை கடக்க இருக்கிற சக்தியெல்லாம் செலவளிக்க வேண்டியிருக்கும். சில சமயம், ஒரு சிலர் வந்து வாழ்கை என்றால் என்ன என்பதை காட்டிவிட்டு செல்வார்கள்.

கார்தும்பி

கார், மழைக்கார்
கருமேகம், மழைமேகம்
நிறைமேகம், சூல் கொண்டவள்
இன்றைக்கு செல்வது எத்திசை?
ஓங்கி உயர்ந்து அவளை
தழுவ நிற்பவனுக்கு அல்லாமல்,
எதற்கு அவள் பொறுத்துச் செல்வாள்?
ஊடலில் குளிர்ந்தாலன்றி
விலகியிருக்க எதற்கு பொழிவாள்?
தும்பி, கார்தும்பி, கோத்தும்பி
நீயாவது அறிவாயா?
எனக்கென்ன தெரியும் இந்த
கனவுகளை தவிர்த்து இங்கே?
இக்கனவுகள்தானே அவளையும்
கண்டெடுத்துத் தீற்றின?
உயிர் கொண்டதும் ஓடி ஒளிபவள்
என்ன நினைத்தாளோ, எப்படி அறிய?
ஒருமுறை நேரில் கண்டால்
நமக்கு எல்லாம் தெளியும்
அதுவரை அவள் நிறம்
மழைக்கார் போலிருக்கட்டும்

05-நவம்பர்-2016

மரணமுட்டு

எதாவதொரு மரணமுட்டில்
மோதி நின்றாக வேண்டியிருக்கும்
அங்கு மரணம் பாதைக்கே
நம் மரணம் பாதையில்
நிகழக்கூடும் என்பது உண்மைதான்
பாதையின் மரணம் முற்றிலும்
வேறொரு செய்தியை தாங்கியது
எல்லா பாதைகளும் உங்களை
சரியான இடத்தில் சேர்ப்பதில்லை
என்பதைப்போலவே நீங்கள் சேர்க்கப்படும்
தவறான இடமும் நன்னோக்கில்
உங்களை வேண்டியிருக்கலாம்
மேலும், அதுகூட ஒருவேளை
பிறனின் நலமாக இருக்கலாம்
பிறரின் நலமாக இருக்குமெனில்
ஒருவேளை நான் ஏற்கக்கூடும்
உங்களைப்பற்றி, நானேன்
சொல்வது?

05-நவம்பர்-2016

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s