ஆம்

உண்மையில் இந்த கவிதையின் குரல் எனக்கு ஒவ்வாமையை எற்படுத்துகிறது. ஆனால், இதுவும் என்னுடைய வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்கிற காரணத்தால் நான் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஓவியம் ஒற்றை முதுகுப்பை இன்றைக்கு இரண்டானதை தவிர்த்து நான் இன்னமும் நாடோடியாகவே இருக்கிறேன் என்னுடையவை அல்லாத பொருட்கள் உதாரணத்துக்கு சில கூழாங்கற்கள் வண்ணக் காகிதங்கள், மற்றும் ஒரு பேனா போன்றவை சேர்ந்திருக்கின்றன சில கிழிசல்களும் பறவைகளின் எச்சமும் சேர்ந்துவிட்டது பழைய பையில் எங்கும் சோர்ந்து தங்கியிராவிடினும் எப்படியோ புதுப்பையில் பல்லி முட்டைகள் … Continue reading ஆம்

உ.வே.சாவின் ஆவியும், டின்னவேல்லி ஜில்லாவும் – ஒரு கடிதம்

திரு. எஸ். ரமேஷ் அவர்களுக்கு, இப்படியான உ.வே.சா தனமான தேடல் கொண்ட முயற்சிக்கு இந்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக எப்படி நன்றி தெரிவிப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். புத்தகத்தை தேடியெடுத்து வாசிக்கவாவது செய்யலாம் என்று இணையத்தை திறந்தேன். கொஞ்ச நேரத்தில் எனக்கு ஒரு சமாதானம் கிடைத்துவிட்டது. எப்படியான நன்றியானாலும், டொரன்டோ பல்கலையை சேர்ந்த எவர் செய்வதையும் என்னால் செய்துவிட முடியாது. நாகரீகத்தில் பின் தங்கிய தமிழர்களின் பேய் நடனங்களை பற்றியும், பேய் வழிபாடு பற்றியும் குறிப்பிட்டு எழுதப்பட்ட … Continue reading உ.வே.சாவின் ஆவியும், டின்னவேல்லி ஜில்லாவும் – ஒரு கடிதம்

கோடை

All India Radio, கோடை பண்பலையில் என்னுடைய சிறுகதை சுவருக்கு அப்பால் நாளை (16 மார்ச், 09:00PM) ஓலிபரப்பாக உள்ளது. இங்கே கேட்கலாம். தேடல் கொண்ட பிரம்மச்சாரி ஒருவன், சில சிறுவர்கள் மூலம் தன்னை கண்டடைவதை பற்றிய கதை. நாம் நம்மை பூட்டி வைத்துக் கொண்டிருக்கிற சுவர்களுக்கு அப்பால் இருக்கிற உலகத்தை தேடிச் செல்லும் கதை. சிறுவர்களை பற்றிப் பேசுவதால், என்னை பற்றிய கதையாகவும் சொல்லலாம். சனிக்கிழமை அதன் குரல் பதிவுக்காக கொடைக்கானல் சென்றிருந்தேன். சரியாக இருபத்தி … Continue reading கோடை

ஸ்ருதி – பதம் 04

இன்றைக்கு அந்த பிரதிமை எல்லாம் தெரிந்திருந்தும், கேலியாய் சிரிக்கிறது. ஓவியம் கூண்டுக்குள் இருக்கிற புலியொன்றின் வெறித்த விழிகளும், உறுமல் ஒலியுமாய் எதிர் கொள்கிறேன், ஆனாலும் இவர்கள் உன்னை நினைவுபடுத்தாமல் செல்ல விரும்பவில்லை இவர்களுக்கு அஞ்சி, நாம் ஒளிந்த மூலையொன்றில் இன்றைக்கு தனித்திருக்கிறேன் உன் பிரதிமை ஒன்றை அணைத்தபடி இருக்கிறேன் உன் நினைவாக அதுவா, அல்லது அது உன்னை நினைவுபடுத்துகிறதா? எங்கோ வெயிலில் நீ நாவுலர்ந்து நடக்கிறாய் ஏதோ ஊரில் நீ, அறியாத மனிதர்களுக்கு நடுவே, புரியாத மொழியோடு தவிக்கிறாய் உன் குளிர் மிகுந்த இரவுகள் எப்போதும் போலில்லை … Continue reading ஸ்ருதி – பதம் 04