கோடை

All India Radio, கோடை பண்பலையில் என்னுடைய சிறுகதை சுவருக்கு அப்பால் நாளை (16 மார்ச், 09:00PM) ஓலிபரப்பாக உள்ளது. இங்கே கேட்கலாம். தேடல் கொண்ட பிரம்மச்சாரி ஒருவன், சில சிறுவர்கள் மூலம் தன்னை கண்டடைவதை பற்றிய கதை. நாம் நம்மை பூட்டி வைத்துக் கொண்டிருக்கிற சுவர்களுக்கு அப்பால் இருக்கிற உலகத்தை தேடிச் செல்லும் கதை. சிறுவர்களை பற்றிப் பேசுவதால், என்னை பற்றிய கதையாகவும் சொல்லலாம்.

சனிக்கிழமை அதன் குரல் பதிவுக்காக கொடைக்கானல் சென்றிருந்தேன். சரியாக இருபத்தி நான்கு மணிநேரம் மட்டுமே கிடைத்தது, வீட்டில் தொடங்கி வீட்டில் முடித்தாக வேண்டிய பயணம். என் சித்தியின் திருமணம் காரணமாக அந்த ஒரு வாரமும் நான் சேலத்தில் இருந்தேன். எனக்கு உடன் பிறந்த தம்பி ஒருவன் மட்டுமல்லாமல், உறவில் நிறைய தம்பி தங்கைகள். அவர்களோடான கொண்டாட்டமான வாரமாக அது இருந்தது. வீடு நிறைத்து அவர்கள் என் மேலேறி (நிஜமாகவே) விளையாடும் போது, அன்பு கொண்டிருந்த கெளரவர்கள் நூற்றுவர் சூழ்ந்திருக்கிற கர்ணன் எப்படி உணர்ந்திருப்பான் என்கிற எண்ணம் வரும்.

IMG_20170308_011.jpg

கொச்சிக்கு திரும்புவதற்கு முதல் நாளாக இந்த காரியத்துக்கு அமைந்துவிட்டது. என் தம்பி மாதவனும் என்னோடு வருவேன் என்று சொல்லியதால், இலக்கற்ற பயணமாக இருந்ததை மாற்றி திட்டமிட வேண்டியதாக ஆனது. இரயிலில் முன்பதிவு செய்தேன். நள்ளிரவில் குளித்துத், தயாராகி சரியாக ஒரு மணிக்கு போகவேண்டிய வண்டியில் ஏறினோம். நேற்றைக்கு பதிவு செய்துவிட்டிருந்த ஒருவர் இன்றைக்கு வந்து எங்கள் இருக்கையை கேட்டார். இதென்ன சோதனை என்று அவருக்கு விளக்கி, கொஞ்சம் தூங்கினேன். அருகில் அமர்ந்த என் தம்பி தூங்குவேனா என்கிறான். எழுந்து பார்க்கும் போதெல்லாம் பாடல்கள் கேட்டபடி உட்கார்ந்திருந்தான். அன்றைக்கு பகலிலேயே நிறைய தூங்கிவிட்டேன் என்றான். திண்டுக்கல் சென்று சேரும் வரை அவன் உறங்கவில்லை.

அங்கிருந்து வத்தலகுண்டுக்கு ஏறிய பேருந்தில் உறங்கத் தொடங்கினான். சரிதான் என்று அவனை தாங்கிப் பிடிப்பதை தொழிலாக மேற்கொண்டேன். எங்களுக்கு காலை பத்து மணிக்கு பதிவு. அங்கிருந்த பேருந்தில் இடமில்லாமல் நின்றிருந்தவர்களோடு, நாங்களும் சேர்ந்து நின்று கொண்டோம். இரண்டரை மணிநேர மலையேற்றமும் நின்று சென்றாக வேண்டும். தம்பி உயரமும், எடையும் பலமுமாக சேர்ந்து கடோத்கஜனாக மாறி வருகிறான். ஆனால், அவனுக்கு தாங்க முடியாததாக மலையேற்றம் இருந்தது. பாதி வழியில் உடல் வேர்த்து, கையிலிருந்த நீர் தீர்ந்து தவிக்கத் தொடங்கிவிட்டான். அருகில் இருந்தவர் எழுந்து இடம் கொடுத்தார். என்னில் ஒரு துரும்பும் தவிக்கவில்லை என்பதை சொல்லிவிடுகிறேன். அந்த சீரற்ற வளைவுகளில் பேருந்து வளையும்போது என் உடலை, முதுகில் பையுடன் இப்படியும் அப்படியுமாக கொண்டு போனதை தவிர்த்து வெறெந்த பாதிப்பும் உண்டாகவில்லை. அவன் திண்டுக்கல்லில் தின்ற வடையை சபித்தபடி வந்தான்.

என் குட்டித்தோழி ஹேமாவும் அங்கே வந்திருந்தாள். அவளுக்கு என் வருகையை சொல்லாமல் அழைத்து வரச்சொல்லி இருந்தேன். அவளின் அம்மா ரேவதி முகிலின் சிறுகதையும் ஒலிபரப்பாக இருக்கிறது (17 மார்ச், 09:30PM), என்பதால் பதிவுக்கு எங்களுக்கு முன்னரே வந்திருந்தார்கள். அடைக்கலராஜ் எங்களின் பதிவுகளை கவனத்துடன் செய்து முடித்தார்.

இதற்கு முன்னர் நாங்கள் கொடைக்கானல் சென்றதில்லை. நாங்கள் நால்வரும் பின்னர் படகு இல்லத்தை சுற்றி ஒரு மணிநேரம் மிதிவண்டி கொடுக்கப்படுவதை வாங்கி சுற்றி வந்தோம். அவ்வப்போது நின்று எதையேனும் வாங்கித் தின்றோம். ஹேமாவை உட்கார வைத்து சைக்கிளில் வீர சாகசமெல்லாம் செய்து கொண்டிருந்தேன். அவள் நான் கையை விடுவதை பார்த்ததும் அலறத் தொடங்கிவிட்டாள். அவளை மாதவனுக்கும் தோழி ஆக்குவதற்கு நான் படாதபாடு படவேண்டியதாக இருந்தது. அவளுக்கு அவனை பார்க்க பயமாக இருந்ததாம்!

17264448_814741768664342_1029536180919820753_n

உரையாடல்களால் ஆனது என்னுடைய உலகம். அங்கங்கே அவ்வப்போது சொல்லிவிட்டு நான் மறந்துவிடுகிற நகைச்சுவைகளால் நிறைந்தது. அத்தனையும் எழுதுவது சாத்தியமில்லை என்பதால் (நாங்கள் தப்பினோம் என்பதை உங்களுடைய மனக்குரலாக கொள்க) விடுகிறேன். இடையில் சீரியஸான பேச்சும் இருக்கும்.

அருகில் இருந்த இடங்களுக்கு பிறகு பூங்கா சென்று திரும்பும் போது மழை. குளிரில் நடுங்கி நனைந்து வெளியே வந்து, பின்னர் எல்லோரும் ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டோம். திரும்பவும் கீழிறங்கும் பேருந்து பயணத்தில் என்மேல் தம்பியும், தங்கையுமாக உறங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். இவனை உட்கார வைத்தால், அவள் சாய்ந்திருப்பாள். அவளை நேராக்கினால், இவன். கையோடு கொண்டு போயிருந்த தூயனின் சிறுகதை தொகுப்பில் பெரும்பாலான கதைகளை படித்தேன். கொஞ்சமாக இடையில் தூங்க விட்டார்கள்.

17203037_1590711817609957_1442162532047040547_n

வத்தலகுண்டில் இருந்து நாங்கள் கிளம்ப வேண்டியிருந்தது. எப்போதாவது இனி, ஹேமாவை பார்ப்பதற்கேனும் அங்கே செல்லவேண்டும்.

–  நாகபிரகாஷ்

Advertisements

2 thoughts on “கோடை

    • நாகபிரகாஷ் says:

      ஃபீல் பண்றதுக்கு வயசு வேணுமா என்ன? பண்ணுவமே. அதோட நான் கர்ணனை நினைப்பேன்னு தான் எழுதியிருக்கேன். கறி விருந்துக்கு போறப்போ ஒத்தைக்கால நீட்டி பந்தியில உட்கார்ந்த ராஜ்கிரண் ஞாபகம் வருவாருல்லையா அந்த மாதிரி. பை த வே, சித்தி வீட்டு கறி விருந்த இந்த ட்ரிப்பால மிஸ் பண்ணிட்டேன்.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s