நோக்கு – விளிம்புக்கு அப்பால் – வெளியீடு

சிறுகதை பயிலரங்கில் ஒரு சிறிய எழுத்துச் செயல்பாட்டை கொடுத்திருந்தார்கள். ஒற்றை பக்கம் வரையறை. ஒரு நாள் எல்லோரும் நம்மையே பார்ப்பது போல தோன்றும் தருணத்தை எழுத்தாக்க வேண்டும். அங்கேயே உட்கார்ந்து அதை எழுதிவிட்டு வாசிக்கவும் யாருக்கும் நேரமில்லாமல் கிளம்பி வந்தேன். வெகு நாட்களாக மனதில் இருந்த கதைதான். ஆனால், ஒற்றை பக்கத்துக்கு மேல் எழுதவில்லை. அதை கிடப்பில் போட்டிருந்தேன். பொன்.வாசுதேவனும், அண்ணன் ஜீவ கரிகாலனும் அகநாழிகை இதழுக்கு ஒரு கதை அனுப்பச் சொல்லி கேட்டார்கள். முதலில் இதழுக்காகத்தான் கேட்கப்பட்டது. அதையே புத்தகமாக கொண்டுவரும் முடிவை எடுத்திருந்தார்கள். அந்த ஒற்றை பக்கம் இருப்பதைதான் முழுமையாக்க வேண்டும். அவசர அவசரமாக எழுதத் தொடங்கினேன். முகநூல் குழு உரையாடலில் வரிசையாக படைப்பாளிகள் அனுப்பிவிட்டேன் என்று சொல்லத் தொடங்கியதும் எப்படியாவது எழுதிவிடவேண்டும் என்று எழுதினேன். எழுதும்போதே முதலில் இருந்து திருத்தமும் செய்வேன், மேலும் பல அமர்வுகளிலாக எழுதுவதால் அதுதான் சரிப்பட்டு வரும். நோக்கு என்கிற கதையை ஆறு தினங்களிலாக எழுதி முடித்தேன்.

17757205_1878700939077587_944699468681212108_n

தேதி தள்ளிப் போனது தெரியாமல் வெளியீட்டுக்கு எனச் சென்று கடந்த மாதம் அவஸ்தை பட்டிருந்தேன். பாரதியும், அருணும் என்னை லயோலா கல்லூரிக்குள் கடத்திக் கொண்டு போயிருந்தார்கள் அரை நாள் (அந்த தினம் ரூமியும், ஆண்டாளும் தான் எங்கள் விவாதம்). அப்போது ராஜபாளையத்துக்கும், என் அம்மை ஆண்டாளின் தரிசனத்துக்குமாக அந்த பயணம் விதியால் மாறியது (அதற்கு முதல் வருடம் அதே வாரத்தில் அவளின் கோயிலில் இருந்தேன் நான்). பேருந்து டிக்கெட்டும், கையில் பணமும் திணித்து அனுப்பி வைத்தது அண்ணன் ராஜதுரை. அங்கிருந்து தென்காசி, கொல்லம் வழியாக எர்ணாகுளம். நிறைய அலைச்சல். நிறைய, கொண்டாட்டம்.

01_17952661_885436954930796_7584981568813093537_n

அதன் பிறகு பல்வேறு காரணங்களுக்காக அலைச்சல் இருந்தபடியே இருந்தது. வெளியீட்டை வைத்தால் போக முடியுமாக என்றும் தவிப்பாக இருந்தது. ஊட்டி முகாமுக்கு பிறகு கொஞ்சமாக இயல்புக்கு திரும்பியிருந்தேன். அழைத்தபோது பாரதியும் வருவதால் போகலாம் என்று கிளம்பினேன். ஏற்கெனவே வெளிவரவிருக்கும் அவன் கதையை படித்துவிட்டு நிறைய ஓட்டியிருந்தேன் (அவன் என் கதையை இன்னும் படித்திருக்கவில்லை என்பது வேறு!). சேலத்தில் இருந்தேன். எனவே 12 ஆம் தேதி இரவில் கிளம்பி காலையில் சென்னையை அடைந்தேன். தெளிவில்லாத ஒரு திட்டம் இருந்தது. அன்றே பாரதி வந்து சேர்ந்தாலும் நாங்கள் இருவேறு இடங்களில் தாங்குவதாக இருந்தது. மேலும், காலையில் நான் சந்திக்க வேண்டியிருந்த நண்பர் நல்ல தூக்கத்தில் இருந்தார். நேராக சென்று மாமல்லபுரம் பேருந்தில் உட்கார்ந்தேன்.

20170513_104928

கொளுத்தும் கோடை வெயிலில் மாமல்லபுரம். இதற்கு முன்னர் அங்கே வாசல்வரை ஒருமுறை சென்று திரும்பியிருக்கிறேன். பேருந்தின் ஓட்டுனர் எங்கோ போய் தூங்கியவர் வந்து வண்டியை எடுத்தபோது மணி காலை 8:30 அவர் வண்டியை கிளப்பியிருக்க வேண்டியது 7:00 மணிக்கு. ஏனோ பசியே இருக்கவில்லை. பயணத்தில் தூங்கியபடி இருந்தேன். அந்த நாளின் மாலை வரை அங்கே தான் சுற்றியது. கூழும், மோரும் மேலும் திரவ உணவுகளுமாக உண்டும் போதவில்லை (இப்போதெல்லாம் நாவற்பழம் ஆந்திராவில் இருந்து தான் வருகிறதாம், நிறைய கதைகள் நிறைய மனிதர்கள்). சட்டையெல்லாம் கடற்காற்றின் உப்பு ஊறி உலர்ந்து வெளுப்பாகியிருந்தது. அங்கிருந்து தாம்பரம் சென்று ஓய்வும், உரையாடலுமாக தினம் அர்ஜுனுடன் கழிந்தது. அடுத்த தினம் மதியம் வரை அங்குதான்.

20170513_110058

அங்கிருந்து மதியம் நல்ல உணவுக்காக திருவல்லிக்கேணி, பாரதி தெருவில் இருக்கும் பாரதி உணவகம் ஸ்பான்சர் பை பாரதி அவர்கள். மேலும், பாரதி பார்த்தாவின் எனிமியாதலால் அவனை பார்க்கப் போகவில்லை. ஊர் சுற்றி பின்னர் வெளியிட்டுக்காக மாலை நேரத்துக்கு சென்று சேர்ந்தோம். இனியனும் சேர்ந்து கொள்ள பாரதியை ஓட்டிக் கொண்டிருந்தோம். கொஞ்சம் டிஸ்கவரி புக் பேலஸில் தம்பி தங்கைகளுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொண்டேன்.

18485679_1898269910454023_1996192654675891283_n

வெளியீடு முழுவதும் ஸ்ருதி டீவியால் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எதிர்பாராமல் பேச நேர்ந்ததால் கொஞ்சமே கொஞ்சமாக உளறி வைத்திருக்கிறேன் (07:05 to 08:20). எல்லா நண்பர்களோடும் பேசிக் கொண்டிருந்தது முக்கியமாக இருந்தது. ரமேஷ் ரக்சனோடு கோயம்பேடு கிளம்பும் போது எல்லோரும் ‘வார்னிங்ஸ்’ சொல்லி அனுப்பினார்கள், ஆமாம் அப்படித்தான் ஆனது 🙂

எழுத்தாளர் ஜோ.டி.குருஸ் சிறப்புரை:

– நாகபிரகாஷ்
21-மே-2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s