தாண்டவம்

வெகு காலத்துக்கு முன்பு எழுதிய கவிதைகளில் ஒன்று. அப்போது தைரியமாக பிரசுரத்துக்கு அனுப்பிய வெகு சிலவற்றுள் சேர்த்தி. சொல்வனத்தில் வெளியான என்னுடைய முதல் கவிதை. எத்தனையோ வருடங்கள் ஆனதாக தோன்றுகிறது (2014). என்னவோ, வயதாகிக் கொண்டே போகிறது சற்றும் வளர்கிறேனா தெரியவில்லை. இப்புடவியின் கரிய சாம்பல் மீது நடனமிடும்போது துடிக்கும் அவன் சதைக்கட்டுகளின் மினுமினுப்பில் ஒளிந்தபடி தலைகாட்டும் கர்வத்தை ஒப்பிட்டுப்பார்க்கையில்தான் மிச்சமிருந்த ஒற்றை அணுத்துகளின் கங்கு அணைந்தது அவன் அமைதியானான் மீட்டுருவாக்கத்துக்கான கூறுகளும் எரிந்தது தெரியும் வரை அமைதி நீடித்தது … Continue reading தாண்டவம்

Advertisements

சும்மாயிருத்தல் – ஒரு விவாதம்

வேலையே செய்யாமல் ஏன் இருக்கக்கூடாது என்கிற கட்டுரையை (1, 2) படித்தேன். இலவசங்களைப் பற்றிய கேள்வியிலிருந்து வெகுதொலைவுக்குப் படித்த, பட்டம் பெற்று வேலையில் இருக்கக் கூடியவர்களின் உழைப்பில் ஆர்வமில்லாமை பற்றிப் பேசுவதன் மூலம் செல்கிறீர்கள். இந்தத் தாவல் நிகழ்ந்த இடத்தை மீண்டும் மீண்டும் படித்தபோது தொடர்பே இல்லாமல் நிகழ்ந்த தாவல் அது என்று தோன்றுகிறது. ஏனென்றால் அவர்களுக்கும் இலவசத்துக்குமான தொடர்பை அத்தனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ள முடியாது மேலும் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்ட மாணவரும் தெளிவாக … Continue reading சும்மாயிருத்தல் – ஒரு விவாதம்

தூங்கவும் வேண்டியிருக்கிறது

மூச்சு முட்டுகிறது ஒட்டடையைத் தொட்டுவிட்ட கையை உதறுவதைப்போல உதறிக் கொண்டிருக்கிறேன் அறையில் இருக்கிற பொருட்கள் அத்தனையும் அந்நியமானவை இன்றைக்கு நான் இங்கே உறங்கப் போகிறேன் நேற்றைக்கு தெரியாது இன்றைக்கு நான் இங்கே உறங்கப் போகிறேன் என்று தெரிந்திருந்தாலும் வெறுத்திருப்பேன் எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தாலும் இது என்னுடைய இடம் இல்லை என்னால் சந்நியாசி ஆகமுடியாது ஆனாலும் நான் கேட்பதென்னவோ வீடுபேறு உண்டு, உடல் சுருக்கி ஒடுங்கியிருந்தால் போதும் விரிந்து பரவும் வேட்கையெல்லாம் இல்லை அப்படித்தான் இருக்கவிடுகிறார்களா என்ன? எழுதும்போது … Continue reading தூங்கவும் வேண்டியிருக்கிறது