கவிதையை அந்நியமாக்கல்

கவிதையை செம்மையாக்கம் செய்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இணையத்தில் புழங்கும் சங்கக் கவிதைகள் அத்தனையும், செம்மையாக்கம் என்கிற பெயரில் அந்நியமாக்குவதாக எனக்கு தோன்றுகிறது. எத்தனையோ நூற்றாண்டுகளை கடந்து வந்திருக்கும் கவிதைகளில் கைவைக்க, எளிமைப்படுத்த அல்லது நோக்கம் தரப்படுத்தல் என்பதாக தெரிகிறது, அதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? //எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப// என்கிற வரிகள் படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், தற்செயலாக ஊ.வே.சா அவர்களின் பதிப்போடு … Continue reading கவிதையை அந்நியமாக்கல்

அவியா காவலர்

இன்றைக்கு அவன் வராமல் இருப்பது நல்லது என்பது அவள் எண்ணம். இன்றைக்கு பாருங்கள் ஊரே விழித்திருக்கிறது. தினை விளைந்து நிறைத்துப் பரந்த மலை நாட்டின் நிலங்களில் இன்று அறுவடை. இரவும் பணியைத் தொடர்ந்து விடியும் முன் முடித்திருக்கப் பார்ப்பார்கள். ஏனெனில் அறுவடை முடிந்த நாள் தொடங்கி, சில தினங்கள் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கும் ஊர். அதற்காக கொளுத்தப்பட்ட பந்தங்களின் ஒளி நிறைத்து ஊரில் இருளை அண்டவிடாது. களத்தில் அறுப்போர் களைப்புக்கு தணிப்பாக இசைப்படும் தொண்டகச் சிறுபறையானது, யாமத்தில் கண்ணயர்ந்து உறங்கி விழும் காவலரையும் … Continue reading அவியா காவலர்