தாண்டவம்

வெகு காலத்துக்கு முன்பு எழுதிய கவிதைகளில் ஒன்று. அப்போது தைரியமாக பிரசுரத்துக்கு அனுப்பிய வெகு சிலவற்றுள் சேர்த்தி. சொல்வனத்தில் வெளியான என்னுடைய முதல் கவிதை. எத்தனையோ வருடங்கள் ஆனதாக தோன்றுகிறது (2014). என்னவோ, வயதாகிக் கொண்டே போகிறது சற்றும் வளர்கிறேனா தெரியவில்லை. இப்புடவியின் கரிய சாம்பல் மீது நடனமிடும்போது துடிக்கும் அவன் சதைக்கட்டுகளின் மினுமினுப்பில் ஒளிந்தபடி தலைகாட்டும் கர்வத்தை ஒப்பிட்டுப்பார்க்கையில்தான் மிச்சமிருந்த ஒற்றை அணுத்துகளின் கங்கு அணைந்தது அவன் அமைதியானான் மீட்டுருவாக்கத்துக்கான கூறுகளும் எரிந்தது தெரியும் வரை அமைதி நீடித்தது … Continue reading தாண்டவம்

Advertisements

தூங்கவும் வேண்டியிருக்கிறது

மூச்சு முட்டுகிறது ஒட்டடையைத் தொட்டுவிட்ட கையை உதறுவதைப்போல உதறிக் கொண்டிருக்கிறேன் அறையில் இருக்கிற பொருட்கள் அத்தனையும் அந்நியமானவை இன்றைக்கு நான் இங்கே உறங்கப் போகிறேன் நேற்றைக்கு தெரியாது இன்றைக்கு நான் இங்கே உறங்கப் போகிறேன் என்று தெரிந்திருந்தாலும் வெறுத்திருப்பேன் எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தாலும் இது என்னுடைய இடம் இல்லை என்னால் சந்நியாசி ஆகமுடியாது ஆனாலும் நான் கேட்பதென்னவோ வீடுபேறு உண்டு, உடல் சுருக்கி ஒடுங்கியிருந்தால் போதும் விரிந்து பரவும் வேட்கையெல்லாம் இல்லை அப்படித்தான் இருக்கவிடுகிறார்களா என்ன? எழுதும்போது … Continue reading தூங்கவும் வேண்டியிருக்கிறது

ஸ்ருதி – பதம் 06

 ஓவியம் விலகி நின்று வாசிப்பவனாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன் எவரோடும் சேர்ந்துப் போரடிக்கும் வலுவிருப்பதில்லை என்னிடம் அகத்தில் கொண்டதை உன்னிடம் பகிரப்போவதில்லை என்று தெரிந்தால் ஒருவேளை நீ வருத்தப்படலாம் இந்த ரகசியங்களை இன்னும் சில காலமேனும் பேண அவசியம் இருப்பதால் உன்னைக் கடந்துதான் போயாகவேண்டும் இந்தப் பக்கங்கள்தான் தீருவதாயில்லை இதில் நகைச்சுவையை நுழைத்தவன் ஏனோ சற்றேனும் என்னை அதனோடு இணைக்காமல் விட்டிருந்தான் ஆனால், நீ இன்னமும் நான் நகைத்துத் திரிவதாகவே நம்புகிறாய் எனவே... - நாகபிரகாஷ் (சில … Continue reading ஸ்ருதி – பதம் 06

முழுவருட பொய்கள்

இதுவரை எழுதியவற்றிலேயே நீண்ட கவிதை இது. ஒரு வருடத்துக்கு முன்னால் எழுதியது. இப்போதும் கவிதையாக இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு நினைவுக்காக பகிர்கிறேன் (சத்தியமாக காதல் கவிதை இல்லை, அதெல்லாம் சரிப்பட்டு வராது).  புகைப்படம்  முழுவருட பொய்கள் இந்த முழுவருட பொய்களுக்கு என்றைக்கும் தனி மரியாதை உண்டு அது வெளிப்படுகிற நேரத்தில் நீங்கள் குழப்பத்தின் உச்சிக்கு செல்வீர்கள் அரையாண்டிலேயே உள்ளுணர்வை நீங்கள் கவனித்திருக்க வேண்டும் சிந்தனை செயல் நேரம் அத்தனையும் காவு வாங்கப்பட்ட பின்னும் அந்த முழுவருட பொய்களை … Continue reading முழுவருட பொய்கள்

ஸ்ருதி – பதம் 05

 ஓவியம் அவள் ரதத்தில் குதிரை ஒன்றும் பூட்டப்பட்டிருக்கவில்லை என்னிடம் வந்திருந்த காரணம் என் பார்வை நேர்கோட்டில் அமைவதென என் தேவை இப்போதைக்கு அமையாதென என் எனக்காக இல் அமைவதென இடம் இருக்கவில்லையென சொல்லி சிறு செம்மறியாட்டின் தலை நீவும் சிறுமியாக மாறி என்னருகில் உட்கார்ந்தாள் இப்படி துள்ளித் திரிந்தே வாழ்ந்து முடிக்கிறேனே என்றேன் அப்போது நான் போகட்டுமா என்கிறாய் இல்லை இரு கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம் இல்லை எப்போதும் இப்போது நான் என்னதான் செய்யட்டும்? … Continue reading ஸ்ருதி – பதம் 05

ஆம்

உண்மையில் இந்த கவிதையின் குரல் எனக்கு ஒவ்வாமையை எற்படுத்துகிறது. ஆனால், இதுவும் என்னுடைய வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்கிற காரணத்தால் நான் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஓவியம் ஒற்றை முதுகுப்பை இன்றைக்கு இரண்டானதை தவிர்த்து நான் இன்னமும் நாடோடியாகவே இருக்கிறேன் என்னுடையவை அல்லாத பொருட்கள் உதாரணத்துக்கு சில கூழாங்கற்கள் வண்ணக் காகிதங்கள், மற்றும் ஒரு பேனா போன்றவை சேர்ந்திருக்கின்றன சில கிழிசல்களும் பறவைகளின் எச்சமும் சேர்ந்துவிட்டது பழைய பையில் எங்கும் சோர்ந்து தங்கியிராவிடினும் எப்படியோ புதுப்பையில் பல்லி முட்டைகள் … Continue reading ஆம்

ஸ்ருதி – பதம் 04

இன்றைக்கு அந்த பிரதிமை எல்லாம் தெரிந்திருந்தும், கேலியாய் சிரிக்கிறது. ஓவியம் கூண்டுக்குள் இருக்கிற புலியொன்றின் வெறித்த விழிகளும், உறுமல் ஒலியுமாய் எதிர் கொள்கிறேன், ஆனாலும் இவர்கள் உன்னை நினைவுபடுத்தாமல் செல்ல விரும்பவில்லை இவர்களுக்கு அஞ்சி, நாம் ஒளிந்த மூலையொன்றில் இன்றைக்கு தனித்திருக்கிறேன் உன் பிரதிமை ஒன்றை அணைத்தபடி இருக்கிறேன் உன் நினைவாக அதுவா, அல்லது அது உன்னை நினைவுபடுத்துகிறதா? எங்கோ வெயிலில் நீ நாவுலர்ந்து நடக்கிறாய் ஏதோ ஊரில் நீ, அறியாத மனிதர்களுக்கு நடுவே, புரியாத மொழியோடு தவிக்கிறாய் உன் குளிர் மிகுந்த இரவுகள் எப்போதும் போலில்லை … Continue reading ஸ்ருதி – பதம் 04

ஸ்ருதி – பதம் 03

அவளுக்கு பயமே இல்லை. என்ன தான் செய்துவிடுவாய் என்கிறாள். இந்த நள்ளிரவிலும் இதைத்தான் விட்டுவிட இயல்வதில்லை. நூறு நூறு வருடங்கள் ஆகியும் இன்னும் உனக்கென என்னை வேண்டி இரு... க்கிறாயா என்கிறாய்! தொலையேன் என்றால் எதையென்று தொலைப்பது? திசையறியா தேசம் ஒன்றில் உன்னை பார்த்த நினைவிருக்கிறது நிஷ்களங்க தாரிணியாக இருந்தாய் எழுதி வைத்த காதல் கடிதத்தை இனி முதலில் பார்க்கிற நிஷ்களங்க தாரிணிக்கே நான் கொடுப்பேன் என்று சொன்னால் நீ வந்தே தான் ஆக வேண்டும் - … Continue reading ஸ்ருதி – பதம் 03

ஸ்ருதி – பதம் 02

எத்திசையில் அவள்? நாடோடி, கடலோடி பல நிலங்களில் தேடியும் என் கண்களில் சிக்கிவிடவில்லை. ஆனால், ஒருத்தி அவள் உள்ள திசையறிவாள். ஓவியம். இனி கன்றுக்கிரங்க அவளில்லை கோதை, நான் நற்செல்வனும் தான் அல்லேன் நீதான் இன்னும் உறங்குதியோ? ஒற்றை சொல்லெடுத்தேனும் சொல்லேன் இன்றும் நான் நீங்காதிருப்பேன் அவள் உன்னை சொல்லித் தடுத்தாளோ? எங்கெல்லாமோ தேடித் தவித்தேன் காலே கடுத்துத் தேய நாடெல்லாம் தெருவளந்தேன் அவன் பேர் எண்ணியும் சொன்னதில்லை அவள் பேர் நொடிக்காயிரம் சொல்லித் திரிந்தேன் நகம் … Continue reading ஸ்ருதி – பதம் 02

ஸ்ருதி – பதம் 01

ஆமாம். கொஞ்சமேனும் அந்த காதலை எழுதிவிட முயல்கிறேன். ஓவியம். ஒரு இசைக்கருவியாக இல்லாது ஸ்ருதிக் கருவியாகவே விரும்புவேன் அதன் நிதானத்தை ரசிக்கிறேன் ஆற்றலை மீறவிடாத சக்தியை பிறழ்வுகளை பிடியில் வைப்பதை அதீத முக்கியத்துவத்தோடு ஒரு மூலையில் அமரும் அடக்கத்தை என்னவென்று சொல்லலாம்? அக்காளே மீரா, என்னவென்று சொல்லலாம் மனதை இது வேண்டுவதன் புனிதம் யாரறிவர்? ஒரு சொல்லில் புதையும் அன்புதானே இந்த காவியங்கள் கொண்டதும் பிறப்புக்குள்ளாகவே மீட்டு பிறப்பிக்கும் அவன் கருனையை மெச்சுவதா அல்லது இப்படி ஒரு … Continue reading ஸ்ருதி – பதம் 01