கோடை

All India Radio, கோடை பண்பலையில் என்னுடைய சிறுகதை சுவருக்கு அப்பால் நாளை (16 மார்ச், 09:00PM) ஓலிபரப்பாக உள்ளது. இங்கே கேட்கலாம். தேடல் கொண்ட பிரம்மச்சாரி ஒருவன், சில சிறுவர்கள் மூலம் தன்னை கண்டடைவதை பற்றிய கதை. நாம் நம்மை பூட்டி வைத்துக் கொண்டிருக்கிற சுவர்களுக்கு அப்பால் இருக்கிற உலகத்தை தேடிச் செல்லும் கதை. சிறுவர்களை பற்றிப் பேசுவதால், என்னை பற்றிய கதையாகவும் சொல்லலாம். சனிக்கிழமை அதன் குரல் பதிவுக்காக கொடைக்கானல் சென்றிருந்தேன். சரியாக இருபத்தி … Continue reading கோடை

Advertisements

இவை தூதுக்கவிதைகள் அல்ல

இவ்விரு கவிதைகளும் ஒரு நீண்ட தொடர்வண்டி பயணத்தில் எழுதப்பட்டவை. கர்நாடகா வரையிலான அந்த பயணம் நிறைய கதைகளை என்னுள் விதைத்திருக்கிறது. ஒரு பெரிய கனவையும் தடை நீக்கி துரிதப்படுத்தி இருக்கிறது. கனவுகளே நீண்ட பயணங்கள் போலிருக்கிற வாழ்கை ஒரு சமயத்தில் இணையற்ற மகிழ்சியையும், தொடர்ந்து உடனேயே பெரிய விரக்தி ஒன்றையும் தரக்கூடியது. அதை கடக்க இருக்கிற சக்தியெல்லாம் செலவளிக்க வேண்டியிருக்கும். சில சமயம், ஒரு சிலர் வந்து வாழ்கை என்றால் என்ன என்பதை காட்டிவிட்டு செல்வார்கள். கார்தும்பி கார், மழைக்கார் … Continue reading இவை தூதுக்கவிதைகள் அல்ல

தெற்கின் இரு கவிதைகள்

கொஞ்சம் நாம் நனையவே இன்றைக்கு பெய்யும் மழை, இது தெற்கின் மழையென அறிவாயா? ஓடாதே, நில் நாம் நனைவோம் எல்லா மழைகளும் நனைவதற்கல்லா எல்லா மழைகளும் நினைவிலும் நிற்பதில்லை ஓர் அளவுக்கு எல்லா மழைகளும் குழந்தைகளுக்கே சந்தோஷமளிக்கின்றன நான் கொண்டாடிய முதல் மழை வெயிலோடுகூடியதும் காணவே இதுவரை எவருக்கும் வாய்த்திருக்காத காகங்களின் கல்யாணத்தோடு சேர்ந்ததும் என்று அறிவாயா? எனில், கடல்கடந்து ஏதேனும் தென்திசை தீவு ஒன்றிலாக இருக்கும் நீ கொண்டாடியது ஆலங்கட்டி மழையா? எவருக்கோ எங்கோ பணமழையும், … Continue reading தெற்கின் இரு கவிதைகள்