கர்நாடகத்தில் நடப்பது – 06

எழுந்ததும் மாதவனை எழுப்பினேன். குளிப்பதற்கு மேலே இருந்த பணியாளர்களுக்கான குளியலறைக்கு போனேன். குளிர் நீரில் குளித்துத் தாயாரானபோது, ஏழரை மணி. முதலில் எங்காவது ஏடிஎம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. முந்தைய நாள் இரவிலிருந்தே தேடிக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீரங்கப்பட்டினம் போன்ற இடத்தில், உண்மையில் இந்த பயணத்தில் எங்குமே ஏடிஎம்கள் அரிதாகவே கண்ணில் பட்டன. பெரும்பாலானோர் தேசிய வங்கிகளை பயன்படுத்துவதை விடவும் தங்களது மாநில வங்கிகளையும் உள்ளூர் கூட்டுறவு வங்கிகளையுமே பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏடிஎம்கள் குறைவு. என்னிடம் ஒருவர் பேடிஎம் போன்ற … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 06

Advertisements

கர்நாடகத்தில் நடப்பது – 05

காலையில் குறட்டை அதன் உச்சகட்டத்தில் என்னை எழுப்பியபோது மணி ஆறரை. ஒவ்வொன்றுக்கும் ஒரு நீண்ட வரிசையில் காத்திருந்தாலே காரியம் நடக்கும். நேற்றைக்கு கண்ணில் பட்டிருக்காத வடநாட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. அதில் சிலர் நீண்ட பயணம் முழுவதும் தொடர்வண்டியில் குளிக்க முடியாமலேயே வந்து வரிசையில் நின்றது போலிருந்தார்கள். எப்படியோ அரையும் முக்காலுமாக குளிர்ந்த நீரில் குளித்துத் தயாரானபோது மணி ஏழரை. மாதவனும் சீக்கிரமே தயாராகி வந்தான். அருகிலேயே இருந்த சிறிய கடையில் தலைக்கு இரண்டு தேநீர். அப்படியான … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 05