கர்நாடகத்தில் நடப்பது – 07

எங்கள் அறை இருந்தது சோமநாதபுரத்துக்கு உள்ளே செல்லும் சாலைக்கு அருகில், பண்ணூரில். ஏழு மணிக்கு தயாராகி தொட்டுவிட முடியும் பனியில் குளிருக்கு இதமாக தேநீர் குடித்தோம். அப்போது தயாராக நின்றிருந்த ஷேர் ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். அந்த ஆட்டோ சோமநாதபுரம் தாண்டி எங்கேயோ போவது. கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர். ஒருவருக்கு பத்து ரூபாய். கேசவன் கோயில் ஒரு பெரிய வளாகம் என்று நான் எதிர்பாக்கவில்லை. ASI நுழைவுச் சீட்டு தருவது நாங்கள் போன கோயில்களில் இதுவே முதலாவது. … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 07

Advertisements

கர்நாடகத்தில் நடப்பது – 01

என் இரண்டாவது கர்நாடகப் பயணம் இது. ஒரு வருடமாகவே, முதல் பயணத்துக்குப் பிறகு இப்போது வரைக்கும் ஒரு கேள்வி என்னைத் தொந்தரவு செய்தபடியே இருந்தது. எது என் நிலம்? என் ஆழத்தில் எந்த நிலம் இயல்பாகப் பதிந்திருக்கிறதோ அது, எனில் என் மொழியானது அந்நிலத்தில் புழங்குவது. உண்மைதான். ஆனால் என் நாக்கில் இருக்கிற, என் அம்மாவின் மொழியாக இருந்த, அவளுடைய அம்மையுமே கொண்டிருந்த மொழியின் நிலம் இதுதானோ என்கிற சந்தேகம். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தமிழ்நாட்டில் … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 01