அண்டைப் பெருமழை

குங்குமம் (ஆகஸ்ட் 24) இதழுக்காக கட்டுரை கேட்டிருந்தார்கள். கேரள வெள்ளம் குறித்து. கவிஞர் சுகுமாரனிடம் எழுத முடியும் என்று தோன்றவில்லை என்றேன். ஆனால் தொடர்ந்து முகாம்களுக்கு சென்று வந்ததும், நேரில் பாதிப்புகளை பார்த்து உண்டான கொந்தளிப்பில் இரவொன்றில் இதை எழுதத் தொடங்கினேன். நானே எழுதாமல் விட்டால் என்ன பொருள் இருக்க முடியும். திருத்தப்படாத முழுக் கட்டுரையையும் கீழே தந்திருக்கிறேன். * இந்த வருடம் நல்ல மழை என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஓணக்காலம் வரை பெய்கிற இடவப்பாதி மழை. இம்மாத தொடக்கத்தில் … Continue reading அண்டைப் பெருமழை

இப்படியாக ஹைதராபாத் – 02

ஒரு பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று குழப்பம் இருக்கிறது. Bouguereau. அவர் வரைந்த ஓவியங்கள் பார்த்திருக்கிறேன். கணினியில் எல்லாம். இப்போது பிப்லிஸ் என்கிற ஓவியம் நேரிலும் பார்த்துவிட்டேன். சாலார் ஜங் அருங்காட்சியகம். உலகின் பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. மேலும் தனிநபர் சேகரிப்பு என்கிற வகையில் முதலாவது இதுவே. சாலார் ஜங், மிர் யூசுப் அலி கானின் சேகரிப்புகள். அதற்கு ஒரு நாள் போதாது. சில முக்கியமான பகுதிகள் மட்டும் பார்க்கலாம் என்பது பாரதியின் யோசனை. ஒரு … Continue reading இப்படியாக ஹைதராபாத் – 02

கர்நாடகத்தில் நடப்பது – 06

எழுந்ததும் மாதவனை எழுப்பினேன். குளிப்பதற்கு மேலே இருந்த பணியாளர்களுக்கான குளியலறைக்கு போனேன். குளிர் நீரில் குளித்துத் தாயாரானபோது, ஏழரை மணி. முதலில் எங்காவது ஏடிஎம் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. முந்தைய நாள் இரவிலிருந்தே தேடிக் கொண்டிருக்கிறோம். ஸ்ரீரங்கப்பட்டினம் போன்ற இடத்தில், உண்மையில் இந்த பயணத்தில் எங்குமே ஏடிஎம்கள் அரிதாகவே கண்ணில் பட்டன. பெரும்பாலானோர் தேசிய வங்கிகளை பயன்படுத்துவதை விடவும் தங்களது மாநில வங்கிகளையும் உள்ளூர் கூட்டுறவு வங்கிகளையுமே பயன்படுத்துகிறார்கள். அதனால் ஏடிஎம்கள் குறைவு. என்னிடம் ஒருவர் பேடிஎம் போன்ற … Continue reading கர்நாடகத்தில் நடப்பது – 06

கட்டப்பனையில் ஒரு பெருங்கூத்து

அறை நண்பர்கள் கிட்டத்தட்ட தினமும் வெளியே எங்காவது செல்வார்கள். உண்ட பின்னர் ஒரு நடை, விடுமுறை என்றால் அங்கோ இங்கோ ஒரு ஊர் சுற்றல் என்று இருப்பார்கள். என்னையும் அழைப்பார்கள். என் அறையில் அரிதாகவே மலையாளிகள் வந்து சிக்குவதுண்டு மற்றபடி பெரும்பாலும் தமிழ்ப் பையன்கள். அழைக்கும் போது சரியாக ஏதாவது படித்தபடியோ, படிப்பதற்கு தயாரித்தபடியோ இருப்பேன். எரிச்சலாவார்கள். ஆனாலும் தொடர்ந்து தினமும் 'வாடா மச்சி' என்று கூப்பிட்டபடியே இருப்பார்கள். இப்போது அறையைப் பகிர்ந்த நண்பர்கள் கிட்டத்தட்ட ஒரு … Continue reading கட்டப்பனையில் ஒரு பெருங்கூத்து

சிதம்பர நினைவுகள்

ஒரு நடை கிளம்பினேன். அறைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தன. எப்போதும் இரைச்சலாக இருக்கும். பெரும்பாலும் என் குரல். அறைக்கு நால்வர் என இருபது பேர் இருக்கிற தங்குமிடம் அது. ஒவ்வொருவராக கிளம்பிப் போயிருந்தார்கள். சிரமமாக இருந்தது தனிமையில் இருப்பதற்கு. ஓணக்காலம் தொடங்கும் முன்பே விடுமுறை விடுவது எர்ணாகுளத்தில் வழக்கம். இந்த நகரத்தில் பெரும்பாலானவர்கள் கல்விக்கும், வேலைக்கும் வந்திருப்பவர்கள். குடும்பத்தோடு இங்கே இருக்கிறவர்களும் ஓணத்தை கொண்டாட தறவாட்டுக்கு போவதே வழக்கம். ஓரே தமிழ்க் குரல்களாக கேட்டது நான் வசிக்கிற … Continue reading சிதம்பர நினைவுகள்