குற்றமும் தண்டனையும்

குற்றமும் தண்டனையும் நாவலை முழுவதும் படித்த பிறகு ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் படித்து முடித்த போது எப்படி அதைப்பற்றி எளிமையாக எழுத முடியும் என்று தோன்றியது. கொஞ்ச நேரம் விரக்தியோடு உட்கார்ந்திருந்தேன். ஒரு நீண்ட காத்திருப்பில், தொலை தூரத்தில் தெரிகிற வாழ்கைக்கான காத்திருப்பில் ரஸ்கோல்நிகோவையும், சோனியாவையும் விட்டுவிட்டு நாவல் முடிகிறது. சோனியா ஒரு தேவதை. தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து தவறி விழுந்து முடிவற்று சரிந்து கொண்டேயிருந்த ரஸ்கோல்நிகோவை மீட்டெடுக்க வந்த … Continue reading குற்றமும் தண்டனையும்

Advertisements

வெறுமனே குழந்தைகள் – 01

மனிதர்களின் உதவும் குணம் என்பது இயல்பான ஒன்று. பரிணாமத்தில் வந்தது. வேட்டைச் சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாய் இருக்க தேவை இருந்தது. ஆபத்துகளில் ஒருவரை ஒருவர் காத்து வாழ்ந்தால் மட்டுமே பிழைத்திருத்தல் சாத்தியப்படும் நிலை. குழுக்களுக்கு இடையிலான ஒப்புநோக்கிலும், உதவிக்கொள்கிற குணமுடைய குழுவே நிலைத்திருக்கும் என்பது டார்வினிய பார்வை. இன்றைக்கு சுற்றுப்புற காரணிகள் மட்டுமே அப்படியான நம் இயல்புக்கு தடையான ஒன்றாக இருக்க இயலும். ஸ்டேன்லி மில்கிராமின் 'கீழ்படிதல்' ஆராய்ச்சி பிரபலமானது. கீழ்படிதலின் உச்சியில் பிறருக்கு எந்த … Continue reading வெறுமனே குழந்தைகள் – 01